வியாழன், 5 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (11:37 IST)

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

AC
கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லவே அவதிப்படுகின்றனர். காலை வேளையில் 10 மணி நெருங்கும்போதே வெயிலால் அனத்தல், வியர்த்து ஒழுகுதல் என தொடங்கி விடுகிறது.



வெளியே சென்றால்தான் தொல்லை என்று சிலர் வீடுகளிலேயே இருந்தாலும் கூட வெயிலினால் வீடே அனல் பறக்கிறது. மின்விசிறியை போட்டால் கூட அனல்காற்றுதான் வீசுகிறது என பலரும் புலம்புகின்றனர். ஏசி இல்லாத வீடுகளில் வெயிலின் தாக்கத்தை எப்படி குறைப்பது என பார்ப்போம்.

பொதுவாக வெயில் காலங்களில் கூரை வீடுகளை விட மாடி வீடுகள், ஓட்டு வீடுகள்தான் அதிகம் அனத்தி எடுக்கும். கூரை வீடுகளில் வேயப்படும் தென்னை ஓலைகள் வெப்பத்தை கிரகித்து குளிர்ச்சியை தரக்கூடியவை. அதனால் தென்னை மட்டை, பனை ஓலை போன்றவற்றை மொட்டை மாடிகளிலும், ஓடுகள் மீதும் போட்டு வைத்தால் வீட்டிற்குள் வெப்பம் இறங்காது.


அப்படி இல்லையென்றால் மாடி மீது தண்ணீரை ஊற்றிவிட்டு வெயிலின் தாக்கத்தை தணிக்கலாம். ஆனால் அடிக்கும் வெயிலுக்கு தண்ணீர் சீக்கிரமே ஆவியாகிவிடும். அதனால் மாடிகளில் சணல் சாக்குகளை போட்டு அதன்மேல் தண்ணீர் ஊற்றி விட்டால் வீடு குளுமையாக நீண்ட நேரத்திற்கு இருக்கும்.

இரவு நேரத்தில் அனல் வீசுவதால் தூங்க இயலாமல் பலர் சிரமப்படுவார்கள். அந்த சமயங்களில் ஈர துண்டை நனைத்து பிழிந்து, டேபிள் ஃபேனுக்கு பின்னால் தொங்கவிட்டால் காற்று குளுமையாக வீசும்.

Edit by Prasanth.K