வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (00:12 IST)

வயிற்று பிரச்சனைகளை தடுக்கும் சார பருப்பு !!

சார பருப்பில் புரதம், கொழுப்பு, கால்சியம், நார்ச் சத்து, இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை  அதிக அளவில் இருக்கின்றன.
 
சாரப்பருப்பு குளிர்ச்சி தன்மை கொண்டது. இந்த பருப்பு இயற்கையாகவே உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். 
 
ஆயுர்வேத மருந்துகளில், சாரபருப்பு பெரும்பாலும் சருமத்தில் அரிப்பு, வேர்க்குரு போன்ற சரும சிகிச்சையளிப்பதற்கான தயாரிப்புகளில் சேர்க்கப்படுகிறது.
 
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், எடை கூட நினைப்பவர்கள் தினமும் 10 முதல் 15 கிராம் சாரபருப்பு சாப்பிடலாம். அதிக எடை, கொழுப்பு உள்ளவர்கள்  அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
 
சாரப்பருப்பு குடல் இயக்கங்களை முறைப்படுத்த உதவும். இது மலச்சிக்கல்  ஏற்படாமல் தடுக்கிறது. வயிற்றுப்போக்கை குணப்படுத்துகிறது. வயிற்றுப்  பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
 
சாரபருப்பில் கலோரிகள் குறைவாக உள்ளன, ஆனால் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இது உங்களுக்கு அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.