செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala

பொடுகை விரட்டும் சிறந்த மூலிகை மருத்துவங்கள்......

எலுமிச்சை சாறிலும் பொடுகை விரட்டும் சக்தி உள்ளது. எலுமிச்சை சாறை தலையில் தடவி 15 நிமிடம் கழித்து தலைமுடியை  அலச வேண்டும். அதன் தோலைக் கொண்டும் ஸ்கால்ப்பில் அழுந்த தேய்த்தால் பொடுகு வருவதும் கட்டுப்படும்.

 
ஷாப்பு பயன்படுத்துவதற்கு பதில் தொடர்ந்து சீயக்காய் பயன்படுத்துவதால் கூட பொடுகு குறையும்.  சீயக்காய் தலையை  வறண்டு போகாமல் பாது காக்கும்.
 
உப்பு சிறந்த கிருமி நாசினி. பூஞ்சை மற்றும் பேக்டீரியாவை அழிக்கும். உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து அதனை  கூந்தலின் வேர்க்கால்களில் த்டவி 5 நிமிடம் கழித்து குளியுங்கள். வாரம் 3 நாட்கள் செய்தால் பொடுகு மறைந்துவிடும்.
 
ஸ்கல்ப்பில் உள்ள தோல் செதில் செதிலாக வருவதை தடுக்கும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள்  ஸ்பூன் பூண்டின் பற்களை அரைத்து கலந்து, ஸ்க்ல்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு சேர்த்து குளிக்க  வேண்டும்.
 
கற்பூரத்தை பொடி செய்து அதனை சூடான தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து  குளித்தால் பொடுகு தலைகாட்டாது.
 
சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் ஊற வைத்து, 30 நிமிடம் கழித்து குளித்தால் தலையில் உள்ள பொடுகு முற்ரீலும்  போய்விடும்.
 
காய்ந்த வேப்பம்பூ 50 கிராம் வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளஞ்சூடாக  இருக்கும் போது வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால்,  பொடுகு பிரச்சனை தீரும்.
 
வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை லேசாக சூடேற்றி, தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தீரும். ஒருவர் பயன்படுத்திய சீப்பை மற்றொருவர் பயன்படுத்தும்போதும் பொடுகு வர வாய்ப்புகள் அதிகம்.