007 கொல்றதுக்காகவே பிறந்தவன்: ஜேம்ஸ் பாண்ட் தமிழ் ட்ரெய்லர்!

007
Prasanth Karthick| Last Modified சனி, 29 பிப்ரவரி 2020 (10:33 IST)
உலகமெங்கும் உள்ள ஹாலிவுட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் பட தமிழ் ட்ரெய்லர் இன்று வெளியானது.

நாவல் கதையாக தொடங்கி, காமிக்ஸ் தொடராக வளர்ந்து திரைப்படமாக உயிர்பெற்ற கதாப்பாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். இயான் ப்ளெமிங் எழுதிய இந்த கதை 1962ல் முதன்முறையாக திரைப்படமாக வெளிவந்தது. ஷான் கொனெரி நடிப்பில் வெளிவந்த ‘டாக்டர்.நோ’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இதுவரை 24 படங்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை வைத்து உருவாகியுள்ளன.

இந்த பட வரிசையில் அடுத்த வருடம் 25வது படமாக “நோ டைம் டூ டை” வெளியாக இருக்கிறது. கடந்த 4 படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த டேனியல் க்ரெய்க் இதிலும் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இதுதான் அவரது கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என அவரே அறிவித்துள்ளார். இந்த படத்தை கேரி ஜோஜி ஃபுக்குநாகா இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ஆங்கில ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி ரசிகர்களின் பரவலான வரவேற்பை பெற்றிருந்தது. ஏப்ரம் மாதம் படம் வெளியாக உள்ள நிலையில் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மேலும் பல மொழிகளிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :