வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (09:48 IST)

வேற வேலையே இல்லையா உங்களுக்கு...? விமர்சனத்திற்குள்ளான ஆல்யா, சஞ்சீவ் ஜோடி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். இப்பொது ஆல்யா கர்ப்பமாக இருக்கிறார்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஆல்யா, சஞ்சீவ் இருவரும் வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது அழகு சாதன விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதித்து வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது ஃபேஷியல் விளம்பரம் ஒன்றிற்கு இருவரும் நடித்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு புரொமோட் செய்துள்ளனர். இதற்கு இணையவாசிகள் பலரும் இந்த நேரத்தில் சாப்பிட்டிற்கே வழியில்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள். இப்படி ஒரு விளம்பரம் அவசியமா...? என விமர்சித்து வருகின்றனர்.