செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By siva
Last Modified: வியாழன், 30 மார்ச் 2023 (19:01 IST)

கொள்ளையடிக்கப்பட்ட நகை 200 சவரன்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு 60 சவரன்கள் என்று முதலில் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது அவர் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் 200 சவரன்கள் என புதிய புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி என்ற பெண் நகைகளை திருடியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து புகார் அளித்த நகையை விட அதிகமாக கைப்பற்றப்பட்டதை எடுத்து போலீசாக அதிர்ச்சி அடைந்தனர்.
 
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் கூறியிருந்த நிலையில் தற்போது 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புதிய புகார் கூறியுள்ளார். 
 
ஏற்கனவே ஐஸ்வர்யாவின் வீட்டின் பணிப்பெண் ஈஸ்வரியிடம் இருந்து 143 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் இந்த புதிய புகாரை அவர் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by siva