திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (19:10 IST)

இந்த விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் பெருகும்..!

Viratham 1
ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை  வரலட்சுமி நோன்பு இருந்தால் மாங்கல்ய பலம் பெருகும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்  
 
பொதுவாக பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து பூஜைகள் செய்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக மாதாந்த வெள்ளி என்று கூறப்படும் தமிழ் மாத கடைசி வெள்ளி அன்று வரலட்சுமி நோன்பு இருந்தால்  கணவன் மற்றும் குடும்பத்தினர் நலமாக இருப்பார்கள் என்றும் குறிப்பாக மாங்கல்ய பலம் பெருகும் என்றும் நம்பப்படுகிறது. 
 
ஒவ்வொரு பெண்ணும் தங்கள் குல வழக்கப்படி கணவன், குடும்பம் நன்மை வேண்டி அம்மனிடம் வேண்டிக் கொள்வது வழக்கமாக உள்ளது. அன்றைய தினம் விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் சொல்லும் பெருகும் 
 
அதேபோல் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் வரவும் வரலட்சுமி விரதம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran