ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (20:49 IST)

வைகுண்ட ஏகாதேசி விரதம் இருப்பது எப்படி?

ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதேசி வரும் என்பதும் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 25 ஏகாதேசி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதேசி மற்ற அனைத்து ஏகாதேசியை விட முக்கியமானது என்பதும் இதுதான் வைகுண்ட ஏகாதேசி என்ற சிறப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பொதுவாக ஏகாதசியில் விரதம் இருந்து இரவில் கண்விழித்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக வைகுண்ட ஏகாதேசி அன்று விரதம் இருந்தால் குடும்பத்திற்கு நல்லது.
 
வைகுண்ட ஏகாதேசி தினத்தன்று காலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி ஆகியவற்றை அர்ச்சனை செய்து தேங்காய் பழம் பிரசாதங்களை வாங்கி அவற்றை சாப்பிட வேண்டும்.
 
அதன் பின்னர் திவ்ய தேசங்களில் திறக்கப்படும் வைகுண்ட வாசலில் சென்று கருட சேவையை தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும். அடுத்த நாள் துவாதசியில் காலையில் பச்சரிசி சாதமும் அகத்தி கீரையும் நெல்லிக்காயும் சமைத்து சாப்பிடலாம்.
 
ஏகாதேசி விரதம் இருப்பவர்களுக்கு இந்த பிறவியில் மட்டுமின்றி அடுத்த பிறவியிலும் புகழ் செல்வம் ஆரோக்கியம் ஆகியவை கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
 
Edited by Mahendran