செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : திங்கள், 20 மார்ச் 2023 (19:25 IST)

நாளை பங்குனி அமாவாசை.. முன்னோர் ஆசி கிடைக்க விரதம்..!

நாளை பங்குனி அமாவாசையை முன்னிட்டு விரதம் இருந்தால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பங்குனி அமாவாசை தினம் என்பது சைத்ர அமாவாசை என்று அழைக்கப்படுகிறது என்றும் இந்த அமாவாசை தினத்தில் விரதம் இருந்தால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் ஆகும் என்றும் முன்னோர்கள் ஆசியோடு பல தடைகள் விலகும் மற்றும் கூறப்படுகிறது. சைத்ர அமாவாசை தினத்தில் அன்னதானம் செய்தால் மிகவும் நல்லது என்றும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும் என்றும் வேலையில் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருப்பவக்ரள் நாளை அரசமரத்தின் பெயருக்கு தண்ணீர் ஊற்றினால் விரைவில் குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது. 
மேலும் வியாபாரத்தில் சரியாக முன்னேற்றம் இல்லாதவர்கள் நாளை அனுமானை வழிபாடு செய்தால் அனைத்து காரியங்களும் நன்றாக நடக்கும் என்று கூறப்படுகிறது. சைத்ர அமாவாசை தினத்தில் முன்னோர்களை மகிழ்விப்பது மிகவும் முக்கியம் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva