இன்று மார்கழி முதல் நாள் - திருப்பாவை


Sasikala|
மார்கழி மாதத்தை சைவர்கள், தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். 

 

 
இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.

திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.
 
இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.
 
திருப்பாவை: (மார்கழி மாதம் 1 ஆம் தேதி). 
 
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்!போதுமினோ நேரிழையீர்!
சீர்மங்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீகாள்!
கூர்வேல் கொடிந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தாம்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தெலோர் எப்பாவாம்.
 
மேன்மை பெருகும் ஆயர்ப்பாடியில் சகல செல்வங்களூம் நிறைந்த இளம் பெண்களெ! அழகிய அணிகலன்களை அணிந்தவர்களே! மார்கழி மாதமும், முழுமதியோடு கூடிய நல்ல நாளுமான இந்நாளில், மார்கழி நீராட வாருங்கள்.

நாம் வணங்கும் நாராயணன், கூரிய வேற்படையை உடைய நந்தகோபனுக்கும், அழகிய கண்களை உடைய யசோதைக்கும் சிங்கக் குட்டியாய்ப் பிறந்த மகன்! அவன் செந்தாமரைக் கண்களை உடையவன்; சூரிய, சந்திரர் போன்ற திருமுகம் கொண்டவன். இவனால்தான் முக்தி கிடைக்கும் என்று நம்பியிருக்கின்ற நமக்கு அருள் தரும் நாராயணன் இவன். எனவே பாவை நோன்பிலே ஈடுபாடு கொண்டு, உலகோர் புகழ்ந்திட நீராட வாருங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :