1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2022 (20:19 IST)

முதல்முறையாக கிரிவலம் செல்கிறீர்களா? இதோ முக்கிய தகவல்!

Tiruvannamalai
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் சென்று வரும் நிலையில் முதல் முறையாக கிரிவலம் செய்பவர்களுக்கு என சில வழிமுறைகள் இருப்பதாக ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
முதல் முதலாக கிரிவலத்தை தொடங்குபவர்கள் கார்த்திகை அல்லது மார்கழி மாதம் தொடங்குவது நல்லது என்றும் இந்த மாதங்களில் ஏதாவது ஒரு நாளில் திருவண்ணாமலையை ஒரே ஒரு முறை கிரிவலம் செய்து வந்தால் அந்த ஆண்டு முழுவதும் கிரிவலம் செய்த பலனை அடைவார்கள் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
கிரிவலம் செல்லும் போது ஒரு அடி எடுத்து வைத்தால் ஒரு அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva