மாசி பிரதோஷம், சிவராத்திரி.. சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி..!
வத்றாயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலில் மகா சிவராத்திரி, பிரதோஷ விழாவை முன்னிட்டு இன்று முதல் பிப்ரவரி 28 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வனத்துறையால் வழங்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று, அதிகாலை முதல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலை அடிவாரத்தில் குவிந்தனர். இன்று காலை 6:40க்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு, பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு, மாலையில் 18 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நாளை அதாவது பிப்ரவரி 26ஆம் தேதி இரவு சிவராத்திரி, மறுநாள் பிப்ரவரி 28ஆம் தேதி மாசி அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் கூடுவார்கள்.
இதற்காக மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருமங்கலம் போன்ற இடங்களில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
Edited by Mahendran