1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (19:50 IST)

வைகுண்ட ஏகாதேசி: ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பது எப்போது?

srirangam
ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஸ்ரீரங்கத்தில் அன்றைய தினம் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி மோகினி அலங்காரம் நடைபெறும்  என்றும் இரண்டாம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் இதற்கான முகூர்த்தகால் நடும் விழா இன்று நடைபெற்றது என்றும் கெட்டி மேளங்கள் முழங்க நடைபெற்ற இந்த முகூர்த்தகால் நடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது
 
வைகுண்ட ஏகாதேசி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 
Edited by Mahendran