புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (23:52 IST)

வன்னி மரத்தின் சிறப்புகள்

வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம் என்றுதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று சொல்வார்கள்.
 
எப்படி என்றால், அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் என்ன செய்வாரென்றால், தினசரி வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி அந்த வேலையாட்களுக்கு கொடுப்பாராம். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது பொன்னாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலையாகவே இருக்குமாம். கடினமாக வேர்வை சிந்தி அனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது. அப்படியொரு சக்தி இந்த வன்னி மரத்திற்கு உண்டு.
இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது. அதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும். இந்த வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும்.
 
வன்னிக் காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது. இதேபோல, இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும். ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும்.