வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: சனி, 1 அக்டோபர் 2022 (12:05 IST)

நவராத்திரியின்போது வடமாநிலங்களில் வழிப்படப்படும் நவ துர்க்கைகள்!

Nava Durga
நவராத்திரி வழிபாட்டின் முதல் மூன்று நாள் வழிபாட்டிற்குரிய தெய்வமான துர்க்கையை வடமாநிலங்களில் ஒன்பது நாளும் ஒன்பது துர்க்கையாக வழிபடுகின்றனர்.

நவராத்திரி வழிபாட்டில் மிக முக்கியமானது துர்கையின் வழிபாடு. நவராத்திரி வழிபாட்டின் முதல் மூன்று நாள் வழிபாட்டிற்குரிய தெய்வமான துர்க்கையை வடமாநிலங்களில் ஒன்பது நாளும் ஒன்பது துர்க்கையாக வழிபடுகின்றனர். பல்வேறு வேதங்களும், வராஹ புராணமும் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் உள்ளதாக கூறுகின்றன. 
 
நவதுர்க்கைகளின் பெயர்களும், அவரது அம்சங்களும் ஸ்லோகமாக களபிரம்மதேவரால் வராஹ புராணத்தில் குறிப்பிடப்படுகிறது.நவராத்திரி நாட்களில் இந்த ஒன்பது துர்க்கைகளையும் முறையாக செய்வதால் எல்லா நற்பலன்களையும் பெறலாம். நவதுர்க்கைகளும் தங்களுக்கென தனி சிறப்பு உருவமும், ஆயுதமும், வாகனங்களையும் கொண்டு அருள் புரிகின்றனர்.
 
பார்வதியாய் சிவனை மணந்த சைலபத்ரி:
அன்னையின் முதல் வடிவம் சைலபுத்ரி, மலைமகள், பார்வதி, ஹேமாவதி, தாட்சாயிணி என்றும் இவறை அழைப்பர். நம் உடலில் உள்ள ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரமான மூலாதாரமாக இருக்கிறாள். காளையை வாகனமாக வைத்து கொண்டு ஒரு கையில் சூலமும், ஒரு கையில் தாமரையும் கொண்டு அருள் புரிகிறாள்.
 
தவம் புரியும் பிரம்மசாரிணி:
நவராத்திரி இரண்டாம் நாள் வழிபட வேண்டியவள் பிரம்மசாரிணி எப்பொழுதும் தவத்திலேயே வலக்கையில் ஜபமாலையும், இடக்கையில் கமண்டலமும் கொண்டு அருள்பாலிக்கிறாள். இவளுக்கென தனிப்பட்ட வாகனம் இல்லை அறிவு, ஞானம், நன்றி போன்றவற்றின் வடிவாய் திகழ்கிறாள் பிரம்மசாரிணி ஸ்வாதிஷ்டானத்தில் இருப்பவள்.
 
வீரத்தை அருளும் சந்திரகாண்டா:
சந்திர பிறையை தன் நெற்றியில் மணிபோல் அணிந்திருப்பதால் இவள் சந்திரகாண்டா. பத்து கரங்களுடன் மூன்று கண்களுடன் சிங்க வாகனத்தில் காட்சி தருபவர்.  மணிப்பூரக சக்ரத்தில் இருப்பவள். வணங்குபவருக்கு வீரத்தை வழங்குபவள்.
 
இன்பத்தை தருபவள் கூஷ்மாண்டா:
படைத்தல் உருவமாய் காட்சி தருபவள் கூஷ்மாண்டா. சூரிய மண்டவத்தில் இருப்பவள். எட்டு கரத்துடன் சிம்மத்தின் மீது அமர்ந்திருப்பவள், எட்டாவது கரத்தில் கலசததுடன் காட்சி தருகிறாள் அந்த கலசத்தின் மூலம் அஷ்ட சித்தியும், நவததியையும் பக்தர்களுக்கு தருபவள். அனாஹத சக்ரத்திற்கான கூஷ்மாண்டாதேவியை வணங்கினால் பாவம் நீங்கி இன்பம் பெறலாம்.
 
தூய்மையின் வடிவாய் மனதிற்கு அமைதி தருபவள் ஸ்கந்தமாதா:
ஸ்கந்த என்றால் கந்தன், மாதா என்றால் தாய் கந்தன் தாயாக காட்சி தருபவள் ஸ்கந்த மாதா. தன் மடியில் ஆறுமுகத்துடன் கந்தனை அமர்ந்தபடி சிங்க வாகனத்தில் காட்சி தருகிறாள். இவளை வணங்குபவர் மனமும், ஆதாமாவும் அமைதி பெறும். விசுத்தி சக்ரத்தின் தெய்வமாக திகழ்கிறான்.
 
உலகை காத்த காத்யாயினி:
நவராத்திரியின் ஆறாம் நாள் வழிபட வேண்டியவள் காத்யாயினி, இவளே மகஷாசுர மர்த்தினியும் ஆவாள் கையில் வாளுடன் சிம்மம் அமர்ந்திருப்பவள். ஆக்கினை சக்கரத்தின் இறைவியாக திகழ்கிறாள்.
 
அஞ்ஞானம் நீக்கும் காளராத்திரி:
நவ துர்க்கைகளில் பயங்கரமான தோற்றம் கொண்டவர். நவராத்திரியின் ஏழாம் நாளில் வழிபட வேண்டிய காளராத்திரியை சுபங்கிரி என்றும் அழைக்கின்றனர்.யோகிகள் இவளின் அருள் கொண்டு ஏழாம் சக்ரமாம் 'சகஸ்ராகாரத்தை' அடைவர். கழுதை மீது ஏறி அமர்ந்து, நான்கு கரத்துடன், கருமை நிரத்தில் இருப்பவள் காளராத்திரி.
 
வெண்மை ரூபத்தில் மகாகெளரி:
பார்வதி சிவனை நோக்கி தவம் புரிந்த போது அவள் மன்மூடி கருமை நிறமானது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் தருமணம் செய்யும் முன் பார்வதியை கங்கை நீரால் நீராட்டினார். அதன் காரணமாய் தேவியின் உடல் பால் போல் வெண்மையாய் மாறியதாம் அவளே மகா கெளரி துர்க்காஷ்டமி நாளில் துர்க்கையை மகா கெளரி என வழிபடுகிறோம், இவரின் வாகனமும் வெள்ளை காளை.
 
சக்தி தரும் சித்திதாத்தி:
தாமறை மலரில் நான்கு கரத்துடன் அமர்ந்திருப்பவள் பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் அருள கூடியவள். பரமசிவனே இவளை வழிபட்டு அனைத்து சித்திகளையும் பெற்று அர்த்த நாரீஸ்வரர் ஆனார். நவராத்திரியின் கடைசிநாளான மகா நவமிக்குரிய துர்க்கைகளே.