ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (19:58 IST)

திருமண தடையா? உடனே இந்த இரண்டு கோவிலுக்கு போங்க..!

Marriage
திருமண தடையை நீக்க முருகனை வழிபடலாம் என்றும் குறிப்பாக பழனி மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் உள்ள முருகனை வழிபட்டால் உடனடியாக திருமணத்தடை நீங்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக முருகப்பெருமான் விளங்கி வருகிறார் என்றும் எனவே ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் திருமண தடை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
அவ்வாறு திருமண தடை அல்லது திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பேறில் தடை அல்லது குடும்ப ஒற்றுமையில் பிரச்சனை ஆகியவை இருந்தால் வைத்தீஸ்வரன் கோயில் அல்லது பழனி ஆகிய கோவில்களுக்கு சென்று செவ்வாய்க்குறிய பரிகாரங்கள் செய்தால் உடனடியாக அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடுவதும் குடும்பத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran