இந்தியாவின் ஐந்து பணக்கார கோயில்கள் என்னென்ன?
திருப்பதி உள்பட இந்தியாவில் பல பணக்கார கோவில்கள் இருக்கும் நிலையில் டாப் 5 பணக்கார கோவில்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்
இந்தியாவின் பணக்கார கோவில்களில் முதலிடத்தில் இருப்பது திருப்பதி கோயில் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தாலும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் தான் மிகப்பெரிய பணக்கார கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோயிலில் பல ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்ட ரகசிய அறைகள் திறந்தபோது தான் இந்த கோயில் பணக்கார கோயிலாக மாறியது. இன்னும் சில அறைகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் அதில் உள்ள சொத்துக்களின் மதிப்பு பல லட்சம் கோடிகளை தாண்டும் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலின் உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு என்று இதுவரை யாருக்கும் தெரியாது என்றாலும் இந்தியாவில் அதிக சொத்துக்கள் கொண்ட கோவிலின் பட்டியலில் இந்த கோயில் தான் முதலிடத்தில் உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொத்து மதிப்பு 2.5 லட்சம் கோடிக்கும் அதிகம் என சமீபத்தில் கூறப்பட்டது. இதில் 10 டன் தங்கம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
மூன்றாவது பணக்கார கோவில் காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் நன்கொடையாக மட்டும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
சீரடி சாய்பாபா கோயில் இந்த பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த கோவிலின் அறக்கட்டளையில் வருடத்திற்கு ரூ.360 கோடி நன்கொடையாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
அடுத்ததாக மும்பை சித்தி விநாயகர் கோயில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த புயலுக்கு 45 கோடி முதல் 120 கோடி வரை காணிக்கை மூலம் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் வருவதாக கூறப்படுகிறது
மேலும் சபரிமலை சாஸ்தா கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பூரி ஜெகன்நாதர் கோயில் ஆகிய கோயில்களும் பணக்காரன் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva