1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

மயான கொள்ளை பூஜை யாருக்கு, எதற்காக செய்யப்படுகிறது?

ஆண்டுதோறும், மாசி மாத அமாவாசை தினத்தில், "மயான கொள்ளை' விழா, பொதுமக்களால் கோலாகலமாக கொண்டாடுவது  வழக்கம்.



அங்காளம்மன், பெரியண்ணன், முனியப்பன், கருப்பண்ணன் உள்ளிட்ட காவல் தெய்வங்களை சிறப்பிக்கும் வகையில், அவர்களை போல, பக்தர்கள் காளி வேடமணிந்து, வண்ணங்களை முகத்தில் பூசி, மயில் தோகையை கட்டி, நடனமாடியபடி,  சுடுகாடு நோக்கி சென்று, நேர்த்திக்கடன் செலுத்துவர். 
 
கடும் கோபம் அடைந்த அம்மன், உலகில் உள்ள உயிர்களை பலி கொண்டு, ஆக்ரோஷத்தில் இருந்தார். அப்போது,  அங்காளபரமேஸ்வரியின் கோபத்தை சாந்தப்படுத்த, சிவன் ருத்ர நடனமாடி, அம்மனை சங்கலியால் கட்டி போட்டார். அம்மனின்  அடங்காத கோபத்தை கட்டுப்படுத்திய சிவன், ஆண்டுதோறும், மஹாசிவராத்திரி விழாவுக்கு அடுத்து வரும் அமாவாசை  தினத்தில், அம்மனின் கட்டு அவிழ்க்கப்பட்டு, உயிர் பலி வாங்க அனுமதி அளித்தார். 
 
இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, மாசி அமாவாசை தினத்தில், "மயான கொள்ளை' விழாவை பொதுமக்கள் கோலாகலமாக நடத்தி  வருகின்றனர்.