புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By siva
Last Updated : வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (07:18 IST)

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

ஒவ்வொரு ஆண்டும் இந்து மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் விநாயகர் சதுர்த்தி திருவிழா இன்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது 
 
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா பொதுவெளியில் இல்லாமல் ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டிலேயே கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் தங்களுடைய உறவினர்கள் மற்றும் அன்பானவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். விநாயகர் நம்முடைய வாழ்க்கையை அறிவூட்டி கொண்டே இருப்பவர், எப்போதும் நம்மை ஆசீர்வதிப்பார். எனவே அவரது சதுர்த்தி தினமான இன்று அவரை வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும் 
 
சிவனின் மைந்தனான யானை முக விநாயகர் நம் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து தடைகள் மற்றும் சிக்கல்களை நீக்குபவர். நமது குடும்பத்திற்கு இனிமையான மகிழ்ச்சியை கொடுப்பார். நமது வீட்டில் செல்வ செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் நிறைய வேண்டுமென்றால் விநாயகரை இன்று வழிபட வேண்டும்
 
நமது துக்கங்களை அழிக்கவும் மகிழ்ச்சியை மேம்படுத்தவும் நம்மை சுற்றி உள்ள நன்மைகளை உருவாக்கவும் இன்றைய விநாயகர் சதுர்த்தி தினத்தில் அனைவரும் விநாயகரின் பாடல்களைப் பாடி அவரை வணங்குவோம்