நாள்பட்ட திருமண தடைகளை நீக்கும் அற்புத திருக்கோவில்கள்!
பல காலங்களாக பெண் தேடியும் தனது மகனுக்கு பெண் அமையவில்லையே என கவலைப்படும் பெற்றோர்கள் உண்டு. அதே போல தனது பெண்ணுக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லையே என்கிற கவலையிலும் சில பெற்றோர்கள் இருப்பார்கள்.
மனிதனால் முடியாத விஷயத்தை கூட தெய்வத்தால் செய்ய முடியும் என்பார்கள். அப்படியாக திருமண தடையை விலக்கும் சில புனித ஸ்தலங்கள் தமிழகத்தில் உண்டு. அவற்றை இப்போது பார்க்கலாம்.
திருமணஞ்சேரி:
பெயரிலேயே திருமணத்தை கொண்டிருக்கும் இந்த கோவில் திருமண தடை விலகுவதற்கு பிரபலமான கோவிலாக பார்க்கப்படுகிறது. 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அதாவது சிவப்பெருமானுக்கும் பார்வதி அம்மையாருக்கும் திருகல்யாணம் நடந்த இடமாக திருமணஞ்சேரி போற்றப்படுகிறது. எனவே இங்கு வந்து வேண்டுவோருக்கு திருமண தடை நீங்கி சீக்கிரத்தில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் இங்கு திருமணம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்:
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திருப்பரங்குன்றம் முருகன் கோவில் இருந்து வருகிறது. காலத்தால் மிகவும் பழமையான ஒரு கோவிலாக திருப்பரங்குன்றம் கோவில் அறியப்படுகிறது. பரிப்பாடல், திருமுருகாற்றுப்படை மாதிரியான சங்க இலக்கியங்களில் கூட இந்த கோவில் இடம் பெற்றுள்ளது.
முருகப்பெருமான் தனது முதல் மனைவியான தெய்வானையை திருமணம் செய்த இடம் என்பதால் இந்த கோவில் திருமண தடை விலக்கும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக அறியப்படுகிறது.
திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்:
தேவார பாடல்களில் இடம்பெற்ற 25 முக்கிய சிவத்தலங்களில் திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் திருக்கோவிலும் ஒன்றாகும். சம்பந்தர் அப்பர் என பலரால் புகழப்பட்ட இந்த ஸ்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில்தான் விநாயக பெருமானுக்கு திருகல்யாணம் நடந்தது என்பதால் திருமண தடை நீக்கும் சக்தி வாய்ந்த கோவிலாக திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவில்கள் எல்லாம் திருமண தடையால் திருமணம் தாமதமாகிவரும் பக்தர்களுக்கு தடையை நீக்கும் சக்தி வாய்ந்த கோவில்களாக பார்க்கப்படுகின்றன.