வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 மே 2024 (13:27 IST)

தடைகளை விலக்கும் சித்திரை அமாவாசை விரதம்! தர்ப்பணம் செய்ய நல்ல நாள்!

Aadi Amavasai 1
சித்திரையில் வரும் சித்திரா பௌர்ணமி போன்றே சித்திரை அமாவாசையும் மிகவும் முக்கியமானதொரு நாளாகும்.



ஆன்மீக சிறப்புமிக்க மாதமான சித்திரை மாதம் தமிழ் ஆண்டில் முதல் மாதமும் கூட. இந்த மாதத்தில் வரும் தமிழ் ஆண்டின் முதல் அமாவாசையான சித்திரை அமாவாசை பல சிறப்புகளை கொண்டது. சித்திரை அமாவாசை அன்று அதிகாலையே அருகில் உள்ள குளக்கரை அல்லது ஆற்றங்கரை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு திதி செய்வதால் முன்னோர்களினால் ஏற்பட்ட பாவங்களில் இருந்து நம்மை விடுவித்து காரியத்தடைகளை நீக்கும்.

அன்றைய தினம் விரதமிருந்து கருப்பு, வெள்ளை எள் கலந்த சாதம் காக்கைக்கு வைப்பதால் பலன் உண்டாகும். சித்திரை அமாவாசை நாளில் தொழில் நிறுவனங்கள், கடைகள் வைத்திருப்போர் பூசணிக்காயை வாங்கி திருஷ்டி சுற்றி உடைத்தால் கடை மீது உள்ள திருஷ்டி, கெட்ட கண்கள் நீங்கி வியாபாரம் நல்ல நிலையை அடையும்.

சித்திரை மாத அமாவாசை வழிபாட்டினால் நீண்ட காலமாக திருமண வரன் வேண்டுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். வேலை இன்றி இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், குழந்தை வரன் வேண்டுபவர்களுக்கு குழந்தை வரனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Edit by Prasanth.K