செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2024 (18:42 IST)

பால் குடித்த வராஹி அம்மன்.. பக்தர்கள் பரவசம்..!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வராஹி அம்மன் பக்தர்கள் கொடுத்த பாலை குடித்ததால் பரவசமானதாக தெரிகிறது.
 
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மூங்கில் பட்டி என்ற கிராமத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் வராகி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு தினமும் அபிஷேகங்கள் செய்யப்படும் நிலையில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது.
 
அப்போது பக்தர்கள் கொடுத்த பாலை அம்மன் குடித்ததாக செய்திகள் பரவியதை அடுத்து பக்தர்கள் பரவசமடைந்தனர். பக்தர்கள் ஒரு கரண்டியில் பாலை எடுத்து அம்மன் வாய் அருகே கொண்டு சென்ற  போது அது முற்றிலும் காலியானது.
 
இதை பக்தர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு பக்தராக தாங்கள் கொண்டு வந்த பாலை அம்மனுக்கு கொடுத்ததாகவும் அம்மன் பக்தர்கள் அனைவரும் கொடுத்த பாலை குடித்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran