1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

தேவையற்ற முடிகளை நீக்க பயன்படும் வேக்சிங்

உடலிலுள்ள முடிகளை நீக்குவதற்கு ஷேவிங் செய்வதை விட காட்டிலும் உடலிலுள்ள முடிகளை நீக்குவதற்கு வேறொரு மாற்று வழி இருக்கிறது என்பது தான் ஆறுதலான விஷயம்.


 



பல்வேறு காரணங்களுக்காகவும், பல்வேறு நபர்களுக்கும் ஷேவிங் கைவிட வேக்சிங் செய்தல்தான் (மெழுகு பயன்படுத்துதல்) சிறந்த வழிமுறையாக உள்ளது.
 
ஷேவிங் செய்யும் போது நீங்கள் கூர்மையான பிளேடுகள் பயன்படுத்தும் போது, உங்களுடைய உடலில் சில இடங்களில் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இதனை பயன்படுத்தும் போது முடியானது அதிக அடர்த்தியாக வளர்ந்துவிடுவதை தடுத்திட முடியாது. ஷேவிங் செய்வதால் ஏற்படும் எரிச்சல், மெழுகு வேக்சிங் செய்யும் போது வராது.

வேக்சிங் என்பது சூடான மெழுகை உங்களுடைய தோலின் மேல் போட்டு, அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் முடிகளை ரேப்பர்களை பயன்படுத்தி அதன் மேல் ஒட்டி, முடிக்கு நேரெதிர் திசையில் பிய்த்து எடுப்பதுதான் வேக்சிங் முறையாகும். மெழுகின் அளவை கொஞ்சம் தாரளமாய் பயன்படுத்தினால், வலியின் அளவை குறைத்திட முடியும்.

இப்போது மாய்ஸ்சுரைஸர்களை கொண்ட மெழுகுகள் விற்கப்படுகின்றன. முடியை நீக்கத் தொடங்கும் முன்னதாக இதை தடவிக் கொண்டால், அந்த பகுதிகள் மென்மையாக விடுகின்றன. எனவே, மாய்ஸ்சுரைஸர்களை மெழுகில் சேர்த்து தடவுவதன்மூலம் அந்த பகுதியிலுள்ள சருமம் மென்மையாகி விடுவதால், முடியை முழுமையாக வெளியே உருவி எடுத்துவிடமுடியும். 
 
நிரந்தமான முடி நீக்கம் செய்ய வேக்சிங் மிக சிறந்ததாக கருதப்படுகிறது. வேக்சிங் பயன்படுத்தி, முழுமையான அழகைப் பெற்று பலனடைவோம்.