புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

பிசுபிசுப்பான தலைமுடியை பராமரிக்க எளிய குறிப்புகள்...!!

எண்ணெய் பசை மிக்க கூந்தல் மிகப்பெரிய எதிரியாகலாம். எண்ணெய் பசை மற்றும் வியர்வை ஒன்றாக சேரும் போது, உங்கள் கூந்தல் மீது பாதிப்பை உண்டாக்கி, அதை கடினமாக, மங்கலாக ஆக்கலாம். மேலும் இவை உங்கள் கூந்தலை எண்ணெய் பிசுபிசுப்பாக்கிவிடும். 
பிசுபிசுப்பான தலைமுடி எரிச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் சுத்தமான, அழுக்கில்லாத கூந்தலை விரும்பும் போது இந்த தன்மை  இன்னும் எரிச்சல் தரும். 
 
ஸ்டிரைட்னர்கள் உங்கள் கூந்தலுக்கு வரப்பிரசாதமாக அமையலாம் என்றாலும் கூட, உங்கள் உச்சந்தலை பிசுபிசுக்கு அதுவும் காரணமாகலாம். உங்கள் தலை முடி எந்த அளவுக்கு நேரானாதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதில் உச்சந்தலை எண்ணெய்பசை கலந்திருக்கும்.
 
ஆண்டு முழுவதும் உங்களுக்கு எண்ணெய் பசை மிக்க உச்சந்தலை பிரச்சனை இருந்தால், நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவை மாற்றுவது  அவசியம். மாய்ஸ்சரைசிங் ஷாம்புவிற்கு பதிலாக ஹேர் கிளின்சரை நாடவும். டோவ் நர்சிஹிங் ஆயில் கேர் ஷாம்பு பயன்படுத்த லாம். இது  உங்கள் கூந்தலில் இயற்கையான எண்ணெய் பசையை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
 
உங்கள் கூந்தலின் குறிப்பிட்ட பகுதி பிசுபிசுப்பாக இருந்தால் நீங்கள் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை சரியாக அலசுவதில்லை என்று பொருள்.  இந்த நிலையை தவிர்க்க, உங்கள் கூந்தலை பகுதி பகுதியாக பிரித்து அனைத்து பகுதிகளிலும், ஷாம்பு மற்றும் கண்டிஷனர் நீக்கப்படுவதை  உறுதி செய்யும் வகையில் கூந்தலை அலசவும்.   
 
நீங்கள் எப்போது அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருந்தாலும், உங்கள் கூந்தலை புளோ டிரை செய்து நன்றாக உலர வைக்கவும். இது உச்சந்தலையில் சேரும் எண்ணெய் பசையை அகற்ற உதவும். இதனால் இப்போது தான் குளித்து விட்டு வந்தது போன்ற கூந்தல் தோற்றத்தை  அளிக்கும்.