செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

நாள் முழுவதும் சரும உலர்த்தன்மை மற்றும் பாதிப்புகளை போக்க உதவும் ஆலிவ் ஆயில்!!

ஆலிவ் ஆயிலில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்திருப்பதால், சருமத்தின் அழுக்கு, மாசு மற்றும் யுவி கதிர்கள் உள்ளிட்ட பிரிரேடிகள்களில்  இருந்து காக்கிறது. ஆலிவ் ஆயில் சூப்பர் மாய்ஸ்சரைசிங் அளிப்பதோடு முகப்பருக்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து பருக்களையும்  இது குறைக்க உதவுகிறது.
ஆலிவ் ஆயிலலில் உள்ள அற்புதமான மாய்ஸ்சரைசிங் தன்மை காரணமாக, ஆலிவ் ஆயில் சருமத்தை நீர்த்தன்மையுடன் இருக்க வைத்து அது, குளிர் காலங்களில் உலர் தன்மை பெறுவதை தடுக்கிறது.
 
ஆலிவ் ஆயிலை மாய்ஸ்சரைசராக பயன்படுத்தவும். உலர் சருமத்தை எதிர்கொள்ள இது ஒன்று மட்டுமே போதுமானது. முகம் முழுவதும், ஆலிவ் ஆயிலை பூசிக்கொண்டு மேக்கப்பிற்கான அடித்தளமாக அமைத்து உங்கள் மேக்கப் செயல்முறையை துவக்கவும். இது நாள் முழுவதும்  சரும உலர்த்தன்மை மற்றும் பாதிப்புகளை போக்க உதவுகிறது.
 
முகத்தில் தொடர்ச்சியாக ஆலிவ் ஆயிலை தடவிக்கொள்வது, வயோதிக தன்மை பெறுவதில் இருந்து உங்கள் சருமத்தை காக்கிறது. ஆலிவ்  ஆயில் ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்திருப்பதால், முகத்தின் கொலாஜனை மேம்படுத்து, மென்மையுடனும், பொலிவுடனும் வைத்திருக்க  உதவுகிறது.
 
உங்கள் கைவிரல்களில் கொஞ்சம் ஆலிவ் ஆயில் எடுத்துக்கொண்டு, முகம் மற்றும் கழுத்தில் தடவிக்கொள்ளவும். சில நிமிடங்களுக்கு ஆலிவ்  ஆயிலை வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். தினமும் படுக்கச்செல்லும் முன் இவ்வாறு செய்வது, சுருக்கங்கள் மற்றும் நுண்கோடுகள்  தோன்றுவதை குறைத்து, முன்கூட்டியே வயோதிக தன்மை தோன்றுவதை தடுக்கிறது.
 
ஆலிவ் ஆயிலை உங்கள் பவுண்டேஷனில் சேர்த்து பூசிக்கொண்டால் அருமையான இதமான தோற்றத்தை பெற முடியும். மேலும், உங்கள்  முகத்தின் எடுப்பான பகுதிகளில் கொஞ்சம் ஆலிவ் ஆயிலை பூசிக்கொண்டுமுக அழகை மேலும் மேம்படுத்திக்கொள்ளலாம்.