வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

எலுமிச்சை சாற்றினோடு கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து முகத்தில் தடவி 1௦ நிமிடங்கள் நன்றாக சுழற்சி முறையில் தேய்த்துவிட்டு, பின் இதமான நீரில் முகம் கழுவினால் உங்களது முகம் தானாகவே பொலிவடையும்.

மஞ்சளில் இருக்கும் நற்குணங்கள் உங்களது சருமத்தை பிரகாசிக்க வைக்கும். வாரம் இருமுறையாவது மஞ்சள் தேய்த்து குளிப்பது சருமத்திற்கு நன்மை  விளைவிக்கும்.
 
ஓட்ஸ் மற்றும் தயிரை கலந்து உங்களது முகத்தில் உபயோகப்படுத்தி சுழற்சி முறையில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் தங்கி இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இதன் மூலம் முகம் பொலிவடையும்.
 
கடலை மாவுடன் மஞ்சள் அல்லது கடலை மாவுடன் சிறிது அளவு பால் மற்றும் நீர் கலந்து முகத்தில் தடவி, உலர்ந்த பின்பு இதமான நீரில் முகம் கழுவுங்கள். அதன் பின்பு சுழற்சி முறையில் உங்களது முகத்தை நன்கு தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் உங்களது முகம் பிரகாசம் அடையும்.
 
தேனில் உள்ள நற்குணங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது மற்றும் தேனில் உள்ள ஆன்டி-பயோடிக் தொற்று கிருமிகளிடம் இருந்து உங்களது சருமத்தைக் காத்திட உதவுகிறது.
 
தினந்தோறும் காலை தேன் மற்றும் பன்னீர் கலந்து முகத்தில் உபயோகப்படுத்தினால், முகம் பொலிவடையும்.