1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (20:01 IST)

தலைமுடி பிரச்சனைகளை போக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

கூந்தல் பளபளப்புடன் இருக்க ஆலிவ் எண்ணெய்யை நன்றாக தடவி மசாஜ் செய்து வந்தால் முடி பளபளப்பாக இருக்கும். இப்படி வாரம் ஒருமுறை செய்யவேண்டும்.

வேம்பாளம் பட்டையை பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவி வர இள நீங்கும். நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி சாறு எடுத்து அதிமதுர பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வர நரை முடி நீங்கி முடி கருப்பாக மாறும்.
 
கடுக்காய் நரை முடிக்கு சிறந்தது. கடுக்காய் பொடியை சுத்தி செய்து 2 முதல் 3 கிராம் அளவு தேனில் குழைத்து தினமும் ஒரு வேளை சாப்பிட நரை முடி நீங்கும். உடல் உறுதி பெறும்.
 
கருவேப்பிலையை தினமும் 10 இலைகளை நன்றாக வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வரவும். மேலும் கருவேப்பிலை, மருதாணி, செம்பருத்தி ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவைத்து குளித்து வர நரைத்த முடி கருப்பாக மாறும்.
 
வேம்பம்பூ 50 கிராம் எடுத்து 100 மிலி சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி ஆறவைத்து தலைக்கு தேய்த்து 1/2 மணி நேரம் ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.