1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

கிர்ணிப்பழத்தின் அழகு குறிப்புகள்

கிர்ணிப்பழத்தின் அழகு குறிப்புகள்

தலைமுதல் பாதம் வரை அழகைப் பாதுகாக்கும் அற்புத சக்தி கிர்ணிப்பழத்திற்கு உண்டு. இந்த பழத்தில், புரதமும், கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால் கேசத்துக்கு உறுதியையும், சருமத்துக்குப் பொலிவையும் அள்ளித் தருவதில் வள்ளலாக இருக்கிறது. 


 
 
ஐம்பது வயதுக்கு மேல் தோலில் எண்ணெய் பசை குறைந்து, வறண்டு இருப்பவர்கள் பியூட்டி பார்லரில், வேக்சிங் அல்லது திரெடிங் போன்றவற்றைச் செய்து கொண்டால், தோலில் வீக்கம் ஏற்பட்டு விகாரமாகத் தோன்றும், இதற்கு கிர்ணிப்பழ ஜுஸ், வெள்ளரி ஜுஸ் இரண்டையும், சமஅளவு கலந்து தடவினால் வீக்கம் குறைந்து தோல் மிருதுவாகும்.
 
நூறு கிராம் கிர்ணிப்பழ விதையுடன் பயத்தம்பருப்பு, சீயக்காய் தலா கால் கிலோ சேர்த்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலைமுடி சுத்தமாவதோடு முடியின் பளபளப்பும் கூடும்.  

கிர்ணிப்பழ விதையைக் காய வைத்து அரைத்த பவுடர், ஓட்ஸ் பவுடர் இரண்டையும், சமஅளவு எடுங்கள். இதை பேஸ்ட் போல கலக்கும் அளவுக்கு வெள்ளரி ஜூஸ் சேர்த்து தலை முடி முதல் பாதம் வரை தேய்த்துக் குளியுங்கள். இது எண்ணெய், தேய்த்துக் குளித்தது போல குளிர்ச்சியாகவும், வாசனையாகவும் இருக்கும்.

ஓட்ஸ், சருமத்துக்கு நல்ல நிறத்தைத் தந்து, தோலில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்யும். கிர்ணிப்பழ விதை தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராகவும் செயல்படும்.