வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

முகத்தை அழகாக்கும் சில எளிய பயன்தரும் அழகு குறிப்புகள்..!!

வேப்பம் பட்டையை நன்றாக காயவைத்து தூள் செய்து அதில் தினமும் பல தேய்த்து வந்தால் பற்கள் பளபளப்பாக இருக்கும். அத்துடன்  எத்தனை வயதானாலும் பற்கள் விழாது.
பச்சைப் பயிறை சலித்து எடுத்து கோதுமை தவிட்டை கலந்து குளித்தால் தோலில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.
 
முகம் பளபளப்பாக இருக்க, குளிர்ந்த நீரில் சிறிதலவு பாலைக் கலந்து அதை பஞ்சில் தொட்டு முகத்தில் பூசி அரைமணிநேரம் சென்ரதும்  முகத்தைக் கழுவி விடுங்கள். தினமும் இப்படிச் செய்தால் நாளாடைவில் முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறிவிடும்.
 
உலர்ந்த நெல்லி முள்ளியுடன் பயத்தம் பருப்பு சேர்த்து அரைத்து உடலுக்கு பூசிக் குளித்தால் சரும நோய்கள் வராது.
 
தயிரில் ஊறவைத்த வெள்ளரித் துண்டுகளை சாப்பிட்டால் உடல் சூடு உடனே தணியும்.
 
மூக்கின் அருகில் கறுப்பு நிறம் இருந்தால் மோரில் நனைத்த பஞ்சால் அதன்மீது தேய்த்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து  ஒரு மாதம் செய்தால் கறுப்புத் திட்டு காணாமற் போய்விடும்.
 
சந்தனக் கல்லில் ஜாதிக்காய் அரைத்து இரவில் படுக்குமுன் கண்ணைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும். கண்சோர்வு, அழற்சியினால் ஏற்படும் கருமையை சந்தனம் மற்றும் ஜாதிக்காயில் உள்ள குளுமை மாற்றி கண்ணுக்கு புத்துணர்ச்சியைத் தரும். முகப் பருக்களுக்கும் இது  சிறந்த நிவாரணியாகும்.