கோடைக்காலத்தில் முகத்தை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்...!!
கோடை காலங்களில் பழங்கள் நீர் சத்து மிகுந்த காய்கறிகள் சாப்பிடுவதால் முக அழகு கூடும். அவ்வப்போது வெளியேறுவதால் முகத்தில் ஜொலிப்பு கூடும்.
வெள்ளையான சருமம் வேண்டுமானால், இரவில் படுக்கும் போது எலுமிச்சை சாற்றுடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் முகத்தில் தடவவேண்டும். இப்படி செய்து வர விரைவில் சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.
ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.
பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.
ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊறவைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊறவைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.
தயிரில் ஊறவைத்த வெள்ளரித் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சூடும் குறையும். பசும்பாலுடன் அரை ஸ்பூன் கிளிசரின் கலந்து பஞ்சில் தொட்டு முகத்தில் அனைத்து இடங்களிலும் தடவ வேண்டும்.