செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (09:02 IST)

நல்லெண்ணெய் தரும் சரும ஆரோக்கிய நன்மைகள் என்ன தெரியுமா...?

நல்லெண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. இது உடலில் கொழுப்பு சத்தை குறைத்து உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது.


நல்லெண்ணெய்யில் உள்ள துத்தநாகம், எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தையும் போக்குகிறது.

வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.

நல்லெண்ணெய் மிகவும் பிரபலமான பல்வேறு க்ரீம்கள், ஆயின்மெண்ட், சோப்புகள், லோஷன் மற்றும் பாடி ஸ்கரப் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைத் தடுக்கும். அதற்கு தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய்யுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு  பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும்.

நல்லெண்ணெய் உதடுகளுக்கு ஒரு நல்ல நிறத்தை வழங்கும். ஒருவர் தினமும் நல்லெண்ணெயை உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். அதற்கு நல்லெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லெண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே பலன் கிடைக்காது. தினமும் பயன்படுத்தி வந்தால் தான் பலனைக் காண முடியும்.