செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முகத்தில் இருக்கும் கருமை நிறம் நீங்கி பளபளப்பாக்கும் அழகு குறிப்புக்கள் !!

முட்டையின் வெள்ளைக்கருவுடன் தயிரை சேர்த்து நன்கு அடித்து, அவற்றை முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, முகத்தில் இருக்கும் கருமை நீங்கும்.

குறிப்பு 1: இரண்டு ஸ்பூன் கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்து இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அதனுடன் 4 ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவேண்டும். பிறகு ஊறிய உளுத்தம்பருப்பை மிக்ஸியில் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் இதனை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து, 20 நிமிடம் அப்படியே காய விட வேண்டும். சிறிது நேரத்தில் முகத்தில் பூசிய உளுத்தம் மாவு காய்ந்து முகம் நன்றாக இறுகி விடும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதனால் முகத்தில் இருக்கும் கருமை நிறம் நீங்கி, முகம் பளபளப்பாக மாறுவதுடன் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முகப்பருக்களினால் உண்டான தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.
 
வெந்தயக் கீரையை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடியோ அல்லது வாரம் 3 முதல் 4 முறையோ செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.
 
எலுமிச்சை சாற்றினை 1/2 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
 
வெங்காயம் மற்றும் பூண்டை சரிசமமாக எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ, முகத்தில் இருக்கும் கருமையான தழும்புகள் மற்றும் புள்ளிகள் மறையும்.