புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

பொடுகு தொல்லை பிரச்சனையை சரிசெய்ய உதவும் அழகு குறிப்புகள் !!

தலையில் அழுக்குகள் போன்ற பல காரணங்களால் பொடுகு சேர்ந்தால் பெரிய தொல்லைகள் உண்டாகும். தலையில் அரிப்பு, கொப்புளம் என பிரச்சினைகள் தொடரும். அதுமட்டுமல்ல இந்த பாதிப்பு நீடித்தால் தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கும். 

பசலைக்கீரையை மையாக அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இதை அவ்வப்போது செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். வசம்பை  தட்டிப்போட்டு தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு அடிக்கடி தலையில் தடவி வந்தாலும் பொடுகுத்தொல்லை சரியாகும். 
 
சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தாலும் பொடுகு நீங்கும். குளிக்கும்போது தேவைப்பட்டால் சீயக்காய்  பயன்படுத்தலாம். எலுமிச்சைப் பழத்தை பிழிந்து அதன் சாற்றினால் தலையில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
 
கைப்பிடி வேப்ப இலையை எடுத்து, நன்றாக அரைத்து பேஸ்ட் போலச் செய்ய வேண்டும். அதை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரிலோ அல்லது சாதாரண நீரிலோ தலையைக் கழுவ வேண்டும். 
 
வெங்காயமும், நாட்டுக்கோழி முட்டையும் பொடுகைப் போக்குவதில் சிறப்பான பங்காற்றும். முதலில் நான்கைந்து சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து அடித்து அதைத் தலையில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க  வேண்டும்.
 
வெந்தயம் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து முதல் நாள் இரவே நீர் விட்டு ஊறவைக்க வேண்டும். அதை மறுநாள் காலை எடுத்து நன்றாக அரைத்து தலைமுடி மற்றும் மண்டை ஓட்டின்மீதும் படுமாறு தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து முடியை நீரில் அலச வேண்டும்.
 
துளசி மற்றும் காய்ந்த நெல்லிக்காய்ப் பொடிகளை நீரில் கலந்து பசை போலச் செய்து தலையில் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும். ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்த வேண்டும்.