1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2016 (11:20 IST)

தூக்கமின்மையை குணமாக்கும் அக்குபஞ்சர்

தூக்கமின்மையை குணமாக்கும் அக்குபஞ்சர்

இன்றைய நாகரீக வாழ்வு தந்த வரம் இன்சோம்னியா!! 


 
 
இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை என்பது இப்போது சர்வ சாதாரணமாக பரவி வரும் பிரச்சனை. வயது வித்தியாசமின்றி அனைவரும் தவிப்பது தூக்கத்திற்காகவும் தான்! 
 
நோய் ஏற்பட காரணம்: 
 
சராசரியாக 8 மணிநேரம் ஆழ்ந்த நித்திரை அவசியம் தேவை. தேவைக்கு அதிகமாக தூங்குவதும் நோய்தான். 
 
தேவைக்கு குறைவாக தூங்குவதும் நோய்தான். எந்த ஒரு தூக்கமாக இருந்தாலும் தூங்கி எழுந்தவுடன் நமக்கு சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சி ஏற்பட வேண்டும்! சோர்வு ஏற்படுமாயின் அது நோய். 
 
அதிக நேரம் கழித்து தூங்குவதும், விடிந்தும் அதிக நேரம் எழாமல் தூங்கிக் கொண்டே இருப்பதும் நோய்க்கான காரணங்கள்! அறிகுறி என்றும் சொல்லலாம்! மாலை 6 மணிக்கே தூங்கச் செல்வதும் நன்றன்று. 
 
யாருக்கெல்லாம் இந்த நோய் வரும்: 
 
இந்த பரபரப்பான உலக வாழ்க்கையில் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவர் ஏராளம். இது 
யாரைத்தான் தாக்கும் என்று பார்த்தால் 
 
௧. மன உளைச்சல் 
௨. உடலுழைப்பின்மை 
௩. செரிமான கோளாறு 
௪. உடலுக்கு ஒவ்வாத உணவு பழக்கம். 
௫. மற்றும் பல 
 
இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மைக்கு அக்குபங்க்சர் சிகிச்சை மூலம் நிரந்தர தீர்வு காண முடியும்! 
 
கீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுப்பது தூக்கமின்மையை போக்கும் எளிய வழிமுறை! 
 
 
-த.நா.பரிமளச்செல்வி, 
அக்குபஞ்சர் மருத்துவர்