1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 14 ஏப்ரல் 2014 (18:11 IST)

பிஎஸ்என்எல் நிறுவனம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்கவுள்ளது

நாடு முழுவதும் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல், தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தை தொடங்கவுள்ளது.
 
இதுகுறித்து, பிஎஸ்என்எல் இயக்குனர் (நுகர்வோர் பிரிவு) அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: பிஎஸ்என்எல் புதிதாக பல்கலைக் கழகம் தொடங்க வுள்ளது. அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஆகியவற்றை அணுகி இன்னும் 8 மாதத்திற்குள் அனுமதி பெறப்படும்.
 
பல்கலைக் கழகத்தை தொடங்கி பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளை பயிற்றுவிக்க தேவையான கட்டமைப்பு வசதிகளும், போதுமான ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு காசியாபாத்தில் ஒரு மையம் இருக்கிறது. இந்த வளாகத்தில் 2,500ல் இருந்து 3 ஆயிரம் மாணவர்கள் அமர முடியும். இதே போல ஜபல்பூரிலும் ஒரு மையம் உள்ளது. இங்கு ஆயிரம் மாணவர்கள் அமரமுடியும். 
 
புதிதாக தொடங்கப்படும் பல்கலைக் கழகத்தில், ‘சைபர் செக்யூரிட்டி’ பாடப்பிரிவு நடத்தப்படும். இதன் மூலம் 5 லட்சம் மாணவர்களை 2018ம் ஆண்டு இறுதிக்குள் உருவாக்கமுடியும். இந்த பாடப்பிரிவு தற்போதை காலக்கட்டத்திற்கு மிக அவசியமானதாகும். இந்த படிப்பை கற்றுத் தருவதற்கான கட்டமைப்பு மற்றும் வல்லுநர்களும் எங்களிடம் உள்ளனர். தொழில்நுட்ப பயிற்சி மையம் (டீடீஐ) தொடங்கவும் பிஎஸ் என் எல் திட்டமிட்டுள்ளது. இதில் பயிற்சி பெறும் ஊழியர்களை கொண்டு நிறுவன சொத்துகளில் ஏற்படும் இழப்புகளை குறைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.