1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By

மாத சம்பளதாரர்களா? சிடிசி பற்றி தெரியுமா?

மாத சம்பளத்தில் சில வரி பிடிப்புகளுக்கு பிறகுதான் நமக்கு சம்பளம் கிடைக்கும். இந்த வரி பிடிப்புகளில் சிடிசி என்பது குறித்து தெரியுமா? இதை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
சிடிசி (Cost To Company) என்பது நிறுவனம் தனது பணியாளருக்கு செய்யும் நேரடி செலவினம். அதாவது, அடிப்படை சம்பளம், வீட்டுவாடகை, சிறப்பு ஊதியம், போனஸ், தொழிலாளர் வைப்பு நிதியின் பணியாளர் பங்கு, பணிக்கொடை, மருத்துவ செலவுகள், உணவு கூப்பன்கள் போன்றவை சிடிசில் அடங்கும். இதில் எதற்கு வரி பிடிக்கப்படும், எதற்கு பிடிக்கப்படாது என்பதை பார்ப்போம்...
 
வரிவிலக்குப் பெற்ற பிரிவுகள்:
தொழிலாளர் வைப்புநிதியின் பணியாளர் பங்கு 
பணிக்கொடையின் பணியாளர் பங்கு 
வீட்டுவாடகைப், உணவு கூப்பன் (ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.26,400) 
 
வரிபிடித்தம் செய்யக்கூடிய பிரிவுகள்:
அடிப்படை சம்பளம் இதன் 100% வரிக்கு உட்பட்டவை. இது மொத்த சம்பளத்தில் 30-50% வரை இருக்கும். 
சம்பளத்தின் மற்ற அனைத்து பிரிவுகளும் அடிப்படை சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
போனஸ் மற்றும் சிறப்பு ஊதியங்கள் 100% வரிகளுக்கு உட்பட்டது.
விடுமுறை பயண ஊதியம்: 4 ஆண்டுகளில் 2 முறை இந்த சம்பள இனத்திற்கு வரிவிலக்கு கோரலாம்.