திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2020 (12:32 IST)

விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா?

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைப்பு குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், சாம்சங் கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம்01எஸ் மற்றும் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு நவம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே. 
 
கேலக்ஸி எம்01: பழைய விலை ரூ. 7999, தற்சமயம் ரூ. 7499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
சாம்சங் கேலக்ஸி எம்01எஸ்: பழைய விலை ரூ. 9,999, தற்சமயம் ரூ. 8999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
கேலக்ஸி எம்11: பழைய விலை ரூ. 10,499, தற்சமயம் ரூ. 9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.