வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 நவம்பர் 2019 (16:54 IST)

விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பை அறிவித்துள்ளது.  
 
சாம்சங் நிறுவனம் கடந்த செப்டம்பரில் கேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30 எஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது கேலக்ஸி ஏ50எஸ் மீது விலை குறைப்பை அறிவித்துள்ளது. 
 
அறிமுகத்தின் போது இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி  ராம்+ 128 ஜிபி மாடலானது ரூ.24,999 ஆகவும், 4 ஜிபி ராம் + 128 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.22,999 ஆகவும் இருந்தது. அதன் பின்னர் ரூ.2,000 குறைப்பட்டது. 
 
தற்போது மேலும் ரூ.1000 குறைக்கப்பட்டு, இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி ஆனது ரூ.21,999-க்கும், 4 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ.19,999-க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.