வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜூலை 2019 (15:47 IST)

தினுசு தினுசா யோசிக்கிரானுங்க... ஜியோவால் வேதனையில் ஏர்டெல், வோடபோன்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அமர்நாத் யாத்திரை செல்வோருக்காக புதிய விலையில் ரீசார்ஜ் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. 
ஜியோ நிறுவனம் அமர்நாத் யாத்திரை செல்வோருக்காக ஜம்மு காஷ்மீரில் ரூ.102 விலையில் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் 7 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
 
இதோடு ரூ.98-க்கு பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
அடுத்து ரூ.142 விலையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் இந்த ரீசார்ஜ் திட்டத்தை அமர்நாத் யாத்திரை நடைபெறும் வரை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இது போன்ற தினுசு தினுசாக பல சேவைகளை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வருவதால் ஏர்டெல், வோடபோன் போன்ற நெட்வொர்க் நிறுவங்கள் கலக்கத்தில் உள்ளது.