1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2016 (14:50 IST)

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் லைஃப் ஸ்மார்ட்போன்: 199 ரூபாய்க்கா???

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதல் மூன்று மாதங்களுக்கு அன்-லிமிட்டெட் இலவச 4ஜி இண்டர்நெட் மற்றும் வாய்ஸ் காலிங் சேவை வழங்குவதாக அறிவித்து அதற்கான பிரீவியூ சேவையையும் வழங்கி வருகின்றது. 


 
 
இந்நிலையில் இந்தச் சேவை குறித்து பல்வேறு செய்திகள் இணையத்தில் வெளியாகின்றன. தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் லைஃப் சேவை ரூ.199 என்ற குறைந்த விலையில் வழங்கப்படுவதாக வாட்ஸ்ஆப் செயலியில் தகவல் பரவி வருகின்றது.
 
உண்மையில் இந்தத் தகவல் போலியான ஒன்று என்றும் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ரூ.199க்கு சேவை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
 
தேவையில்லா பிரச்சனைகளை தவிர்க்க அதிகாரப் பூர்வமாண அறிவிப்புகளை தவிர்த்து இது போன்ற இணையதளங்களை நம்ப வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.