விலை குறைந்தது ரெட்மி ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா?

Last Updated: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (13:57 IST)
சியோமி நிறுவனம் தனது ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது அதிரடியாக விலை குறைப்பை அறிமுகம் செய்துள்ளது. 
 
சியோமி நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி நோட் 7எஸ், ரெட்மி 7, ரெட்மி வை3 ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் மீது அதிரடி விலை குறைப்பை அமல்படுத்தியுள்ளது. 
 
இந்த விலை குறைப்பு Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம், ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவற்றில் பிரதிபலித்துள்ளது. 
விலை விவரம்: 
1. ரெட்மி நோட் 7எஸ், 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.9,999-க்கு விற்கப்படுகிறது. 
2. ரெட்மி நோட் 7எஸ், 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.11,999-க்கு விற்கப்படுகிறது. 
3. ரெட்மி நோட் 7 ப்ரோ, 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.14,999-க்கு விற்கப்படுகிறது. 
4. ரெட்மி 7, 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி ரூ.500 குறைக்கப்பட்டு ரூ.8,499-க்கு விற்கப்படுகிறது. 
5. ரெட்மி 7, 2 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி ரூ.500 குறைக்கப்பட்டு ரூ.7,499-க்கு விற்கப்படுகிறது. 
6. ரெட்மி வை3, 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :