வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (12:08 IST)

ஐடிபிஐ வங்கிப் பங்குகளை வாங்கும் எல்.ஐ.சி

ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வெளிச் சந்தையில் எல்.ஐ.சி நிறுவனம் பங்கு ஒன்றினை ரூ 61.93 என்ற வீதத்தில் வாங்க முடிவெடுத்துள்ளது.

இந்தியப் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. தனது வருவாயைப் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வாங்குவதற்கு முடிவெடுத்துள்ளது. கிட்டத்தட்ட 26 சதவீதப் பங்குகளை வாங்கும் எல்.ஐ.சி நிறுவனம், ஒரு பங்கினை ரூ 61.93 க்கு வாங்க முடிவு எடுத்துள்ளது. இதற்காக ரூ. 12,602 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.

இதற்கான வேலைகள் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த பரிவர்த்தனைத் தொடர்பான முடிவுகளில் மத்திய அரசின் தலையீடு இருக்காது என ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.