1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2016 (11:02 IST)

மியூச்சுவல் பண்ட் என்றால் என்ன? சரியான மியூச்சுவல் பண்ட் எப்படி தேர்வு செய்வது?

நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் குறிக்கோளை அடைய மியூச்சிவல் ஃபண்டுகள் கண்டிப்பாக உதவும். 

 
முதலீட்டாளர்களின் தேவைக்கு ஏற்ப பங்குகளைத் தேர்வு செய்து மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
 
மேலும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்த பிறகு பங்குச் சந்தையை போலத் தினமும் கண்காணிக்க வேண்டும் என்ற நிலையும் இதில் இல்லை. 
 
பலர் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான முக்கிய காரணம் அதிக லாபம் பெற இயலும் என்ற காரணமே. இந்த முதலீடுகளில் ரிஸ்க் இல்லாமலும் இல்லை. 
 
ஒரு வருடத்திற்கு மேல் முதலீடு செய்யும் திட்டங்களுக்கு வரி விலக்கு, டெப்ட், ஈக்விட்டி, கமாடிட்டி என எதில் வேண்டும் என்றாலும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. 
 
வெளிநாட்டுச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு மற்றும் பிபிஎப், வைப்பு நிதி திட்டங்கள் போன்றவற்றை விட இதில் அதிக லாபம் உள்ளது.
 
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முன்பு வருமானம், செலவு, முதலீடுகள், முதலீடுகளின் இலக்கு போன்றவற்றை முதலில் முடிவு செய்ய வேண்டும். 
 
நிதி சூழல் மற்றும் இலக்கைத் தவிர வயது, முதலீட்டு முறை, ஆளுமை மற்றும் ரிஸ்க் வரும் போது சமாளிக்கும் திறன் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். 
 
நடப்பு சூழலை கருத்தில் கொண்டு குறைந்த, நடுத்தர மற்றும் நீண்ட கால முதலீடு திட்டங்களை தேர்வு செய்யலாம்.
 
மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகம் உள்ளன. குறைவான ரிஸ்க் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகள், அதிக ரிஸ்க் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகள் என இரண்டு வகை மியூச்சுவல் ஃபண்ட் உள்ளன. 
 
இதில் குறைவான ரிஸ்க் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகளில் குறிப்பிட்ட அளவு லாபம் அதாவது குறைந்தது 9 முதல் 15 சடவீதம் வரை பெற இயலும். 
 
அதுவே அதிக ரிஸ்க் உள்ள ஃபண்டுகளில் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யும் போது 30 சதவீதம் வரை லாபம் பெற இயலும்.
 
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது முறையான முதலீட்டுத் திட்டம் - SIP மற்றும் மொத்த முதலீடு என இரண்டு பிரிவாக முதலீடு செய்யலாம். 
 
மொத்த முதலீடு திட்டம் என்பது மொத்தமாக ஒரு முறை முதலீடு செய்வதாகும். அதுவே SIP முதலீடு திட்டங்கள் மூலம் செய்யும் போது மாதம் குறைந்தது 1000 ரூபாய் முதல் தங்களது முதலீட்டைத் துவங்கலாம்.