திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (16:25 IST)

வங்கி கணக்கை மூடுவதற்கும் ஜிஎஸ்டி கட்டணம்: அடுத்த அதிரடி!!

வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டநிலையில், தற்போது மேலும் சில மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.


 
 
குறைந்தபட்ச இருப்பு தொகையினை வங்கி கணக்கில் வைக்க முடியாது என்று வங்கி கணக்கை மூட நினைத்தால் அதற்கும் பல கட்டண அபராடங்கள் விதிக்கப்பட்டுள்ளது. 
 
பொதுவாக வங்கி கணக்கை திறந்த ஒரே வருடத்தில் மூட வேண்டும் என்றால் அதற்கான கட்டணத்தை வங்கியே ஏற்க வேண்டும். 
 
ஆனால், தற்போது இந்திய ரிசர்வ் வங்கி வங்கி கணக்கை மூடுவதற்கான கட்டணத்தினை மாற்றி அமைத்துள்ளது. 
 
வங்கி கணக்கை திறந்து ஒரு வருடம் முடிவதற்குள் மூட வேண்டும் என்றால் 500 ரூபாய் + ஜிஎஸ்டி பணத்தை கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.