புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 22 ஏப்ரல் 2020 (17:12 IST)

ஜியோ - பேஸ்புக் கூட்டு: யாருக்கு லாபம்??

ரிலையன்ஸ் -  பேஸ்புக் கூட்டு இரு தரப்புக்கும் இது வெற்றியாக இருக்கும் என கூறப்படுகிறது.
 
ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை பேஸ்புக் வாங்குவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில் ஜியோவின் 9.99% பங்குகளை 5.7 பில்லியன் டாலர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதவாது இந்திய மதிப்பின்படி 43,574 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. இதனால் யாருக்கு லாபம் என வணிக வல்லூநர்கள் தகவல் வெளியிட்டு வருகின்றனர். 
 
அதன்படி, கொரோனா வைரஸ் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், டிஜிட்டல் சந்தையில் 900 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்கள் இந்தியாவில் இருக்கும் நிலையில், இரு தரப்புக்கும் இது வெற்றியாக இருக்கும் என கூறப்படுகிறது.