செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (17:08 IST)

ஹெலிகாப்டர் விபத்து: நஞ்சப்பசந்திரம் கிராமத்திற்கு ரூ.2.50 கோடி நிதி!

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான கிராமத்தின் வளர்ச்சிக்காக ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. 

 
கடந்த 8 ஆம் தேதி குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த விபத்தில் விமானப்படை கேப்டன் வருண்சிங் 80 சதவீதம் உடல் எரிந்த நிலையில் பெங்களூர் விமானப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.
 
இந்நிலையில் தற்போது கேப்டன் வருண்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேருமே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள நஞ்சப்பசந்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. 
 
இதனிடையே, அந்த கிராமத்தில் நடைபாதை வசதி, தடுப்பு சுவர் அமைத்தல், பழுதான வீடுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.