செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (14:21 IST)

ரூ.49 கட்டணத்தில் புதிய டெலிபோன்: பி.எஸ்.என்.எல் அறிமுகம்

தரைவழி டெலிபோன் சரண்டர்களை தடுப்பதற்காக ரூ.49 கட்டணத்தில் புதிய டெலிபோன் பெறும் வசதியை பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி நிறுவனத்தின் பொதுமேலாளர் அறிவித்துள்ளார்.


 



 
 
அந்த அறிவிப்பில் அவர் கூறியதாவது: பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் சேவைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் பிராட்பேண்ட் எந்திரங்களை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு இணைப்பு கொடுக்க உள்ளோம்.
 
இந்த புதிய திட்டம் மூலம் மாதம் ஒன்றிற்கு ரூ.49 கட்டணத்தில் நிலவழி டெலிபோன் இணைப்பு கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தொலைபேசி இணைப்பதற்கான கட்டணம் இல்லை. இலவசமாக சிம்கார்டு ஒன்றும் வழங்கப்படும்.
 
இந்த திட்டத்தில் பேசுவதற்கு அழைப்பு ஒன்றுக்கு ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பி.எஸ்.என்.எல் டெலிபோனில் இருந்து பிற சேவைகளுக்கு தொடர்பு கொள்ள ரூ.1.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்தியா முழுவதும் பேசுவதற்கு முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது. சேவையை பல்வேறு காரணங்களால் துண்டித்து கொண்ட வாடிக்கையாளர்களின் நிலுவை கட்டணத்தை தவணைகளில் பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
3ஜி சேவையை பலப்படுத்த கூடுதலாக ஒலிபரப்பு டவர்களை ஏற்படுத்தி வருகிறோம். 4ஜி சேவையை கொண்டு வருவதற்கு வசதியாக நகரமெங்கும் புதியதாக 300 டவர்களை நிறுவ உள்ளோம். இதன் மூலம் 4ஜி சேவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என கூறினார்.