திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2017 (15:34 IST)

13 ஆண்டுகளாக ஆல்டோ செய்து வரும் சாதனை: என்னனு தெரிஞ்சிகோங்க!!

கடந்த நிதி ஆண்டில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி நிறுவனத்தின் ஆல்டோ மாடல் கார் முதலிடத்தில் உள்ளது.


 
 
கடந்த நிதி ஆண்டில் மாருதி ஆல்டோ மாடல் கார் 2.41 லட்சம் விற்பனையாகி இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 8.27 சதவீத சரிவு தான். 
 
இருப்பினும் ஆல்டோ தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. இந்த கார் தொடர்ந்து 13-வது ஆண்டாக முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டாம் இடத்தில் வேகன் ஆர், மூன்றாம் இடத்தில் டிசையர்,  நான்காம் இடத்தில் ஸ்விஃப்ட், ஐந்தாம் இடத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10, ஆறாம் இடத்தில் ஹூண்டாய் எலைட் ஐ20, ஏழாம்  இடத்தில் மாருதி பலெனோ, எட்டாம் இடத்தில் ரெனால்ட் க்விட் மாடல், ஒன்பதாவது இடத்தில் மாருதி எஸ்யூவி ரக பிரிஸ்ஸா மற்றும் பத்தாவது இடத்தில் மாருதி செலிரியோ இருக்கின்றது.