வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 15 ஜூலை 2017 (15:25 IST)

84 ஜிபி டேட்டா; 84 நாட்கள் வேலிடிட்டி: போட்டி களத்தில் ஏர்செல்!!

ரிலையன்ஸ் ஜியோவின் வரவுக்கு பின்னர் அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் சலுகைகளையும் இலவசங்களையும் வாரி இறைக்கிறது.


 
 
ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்கள் சலுகைகளை அளித்து வரும் நிலையில் தற்போது போட்டிக்கு ஏர்செல் நிறுவனமும் இறங்கியுள்ளது.
 
ஏர்செல் புதிய சலுகையின் படி வாடிக்கையாளர்களுக்கு 84 ஜிபி டேட்டா (தினமும் 1 ஜிபி), 84 நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
 
மேலும், அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது வடஇந்தியாவில் இந்த சலுகைகளை அளித்துள்ள நிலையில் விரைவில் இங்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.