திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 25 மார்ச் 2017 (16:41 IST)

தினமும் 1 ஜிபி இலவசம்: பி.எஸ்..என்.எல். அதிரடி

இணையதளம் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் தினமும் 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.


 

 
ஜியோவை தொடர்ந்து அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் வரிசையாக அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றனர். எல்லா நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள் ஜியோ நிறுவனத்தை விட சிறந்த சலுகைகளை அளித்து வருகின்றனர். 
 
இந்த வரிசையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் இணையதளம் பயன்படுத்தாத அதன் வாடிக்கையாளர்களுக்கு பான் இந்தியா திட்டத்தின் கீழ் தினமும் 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. அனைவரையும் இணையதளம் பயன்படுத்த இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.